Saturday, January 3, 2009

என்னதான் கிடைக்கும் அமெரிக்காவிற்கு?

கான்டலினா ரைஸ் இந்தியா வருகை, பாகிஸ்தானின் தீவிரவாதத்தை அடக்கி ஆள. மும்பை தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள்தான் காரணம், கண்டுபிடித்தது அமெரிக்காவின் உளவுத்துறை. இதே உளவுத்துறைதான் ஈராக்கில் போர் தொடுக்க 'ஜார்ஜ் புஸ்ஸிற்கு' துப்பு கொடுத்தது. பின்பு அவரே உளவுத்துறையின் தவறான தகவல்தான் ஈராக்கின் அழிவிற்கு காரணம் என்று சொல்லி செறுப்படி வாங்கியது வேறு கதை.

உலகின் எந்த மூலையில் போர் வெடித்தாலும் சமாதானம் செய்ய புறப்படும் இவர்களின் நோக்கம், போருக்கு தேவைப்படும் ஆயுதங்களை விற்பதும், அந்நாடுகளின் வளங்களை சுருட்டிச்செல்வதும்தான். ஈராக் போரே இதற்கு தக்க சான்று.

தற்போதைய வருகையின் காரணம்தான் என்ன?
துப்பு கொடுக்கவோ தீவிரவாதத்தை அழிக்கவோ கண்டிப்பாக இல்லை.
தான் மட்டுமே உலக நாடுகளுக்கெல்லாம் ஒரே எண்ணெய் வியாபாரியாக வேண்டும் என்பது அனைவரும் அறிந்த அமெரிக்காவின் லட்சியம்.

அந்த பேராசையை தீர்துக்கொள்ள இதுதான் நல்ல சந்தர்ப்பம். ஈரானிலிருந்து இந்தியாவிற்கு போடப்படவிருந்த எண்ணெய் குழாய் ஒப்பந்தம் நிறைவேர ஒரே வழி பாகிஸ்தான் சம்மதம்தான். இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்தே இருக்க வேன்டும் என்பது வெரும் அரசியல் காரணம் மட்டும் அல்ல, அதற்கு வேரு சில காரணங்களும் உள்ளன (பின்நாளில் பார்ப்போம்).

ஈராக்கும் ஈரானும் வளரும் நாடுகளுக்கு தன் எண்ணெய் விற்பனையை தொடங்கிவிட்டால் அதன் பொருளாதாரமும், அதிக விலை இல்லாமல் வாங்குவதால் இந்தியாவின் பொருளாதாரமும் உயர்ந்துவிடும்.

அமெரிக்காவின் இந்த அரசியல் சதி புரிந்திருந்தால் இந்தியாவும் பாகிஸ்தானும் என்றோ உயர்வை அடைந்திருக்கும், பொருளாதாரத்திலும் நட்புறவிலும்...