சென்னையில் எங்கு திரும்பினாலும் பேருந்தும், வண்ண விளக்குகளும் என்ற காலம் முடிந்துவிட்டது. எங்கு பார்த்தாலும் "டிஜிட்டல் பானர்கள்".
ஒரு புறம் விஜயகாந்த் அரசியல் விளம்பரம்,
மறுபுறம் அம்மா அழைக்கிறார்,
தெருவின் ஆரம்பம் முதல் கடைசி வரை கலைஞர் கலக்குரார்.
உணவில்லாமல் உயிரச்சுமையை சுமது செல்லும் இலங்கை தமிழனுக்கு "அங்கிகாரம்" வழங்குகிறார் தொல்.திருமாவளவன்.
திரும்பிய திசையெல்லாம் திருமாவளவனுக்கு பானர்கள்.
இது போராளியின் வடிவங்கள் போல இல்லை, பெண் பார்க்க டெம்ப்ளட் ஆல்பம் போலதான் தெரிந்தன....
தலித் முன்னேற்றத்திற்காக பாடுபடும் கட்சிக்கு எங்கிருந்து வந்தது இந்த திடீர் பணம் ?
இன்றுவரை முழுமையான அரசியல் தீர்வு காண முடியாமல் தவிப்பவர்களுக்கு உணவிர்காவாவது உதவியிருக்கும்.
சக தமிழ் மன்றங்களையே கொன்று குவித்த விடுதலை புலிகளுக்கு விடுதலை சிறுத்தைகள் நடத்தும் அங்கீகார மாநாடா ?
தமிழினத்தையே அழிக்க முடிவு செய்துள்ள சிங்கள அரசுக்கு ஆயுத பலம் ஒரு புறம் வழங்கும் இந்திய அரசு.
மறுபுறம் விடுதலை புலிகளை ஆதரித்து பேசும் தமிழினங்கள்.
ஒரு அமைச்சர் பதவிக்காக தில்லி வரை சென்று அன்றே பதவியுடன் திரும்பும் கலைஞருக்கு, தமிழினம் அழிவதில் உண்மையான அக்கரை இருந்தால் ?
அரசியல் தீர்வால் மட்டுமே முடிவு காண முற்பட்டிருந்தால் என்றோ சிங்கள மக்களும் முன்னேரியிருப்பர்கள் .....
Thursday, December 25, 2008
Subscribe to:
Posts (Atom)