சென்னையில் எங்கு திரும்பினாலும் பேருந்தும், வண்ண விளக்குகளும் என்ற காலம் முடிந்துவிட்டது. எங்கு பார்த்தாலும் "டிஜிட்டல் பானர்கள்".
ஒரு புறம் விஜயகாந்த் அரசியல் விளம்பரம்,
மறுபுறம் அம்மா அழைக்கிறார்,
தெருவின் ஆரம்பம் முதல் கடைசி வரை கலைஞர் கலக்குரார்.
உணவில்லாமல் உயிரச்சுமையை சுமது செல்லும் இலங்கை தமிழனுக்கு "அங்கிகாரம்" வழங்குகிறார் தொல்.திருமாவளவன்.
திரும்பிய திசையெல்லாம் திருமாவளவனுக்கு பானர்கள்.
இது போராளியின் வடிவங்கள் போல இல்லை, பெண் பார்க்க டெம்ப்ளட் ஆல்பம் போலதான் தெரிந்தன....
தலித் முன்னேற்றத்திற்காக பாடுபடும் கட்சிக்கு எங்கிருந்து வந்தது இந்த திடீர் பணம் ?
இன்றுவரை முழுமையான அரசியல் தீர்வு காண முடியாமல் தவிப்பவர்களுக்கு உணவிர்காவாவது உதவியிருக்கும்.
சக தமிழ் மன்றங்களையே கொன்று குவித்த விடுதலை புலிகளுக்கு விடுதலை சிறுத்தைகள் நடத்தும் அங்கீகார மாநாடா ?
தமிழினத்தையே அழிக்க முடிவு செய்துள்ள சிங்கள அரசுக்கு ஆயுத பலம் ஒரு புறம் வழங்கும் இந்திய அரசு.
மறுபுறம் விடுதலை புலிகளை ஆதரித்து பேசும் தமிழினங்கள்.
ஒரு அமைச்சர் பதவிக்காக தில்லி வரை சென்று அன்றே பதவியுடன் திரும்பும் கலைஞருக்கு, தமிழினம் அழிவதில் உண்மையான அக்கரை இருந்தால் ?
அரசியல் தீர்வால் மட்டுமே முடிவு காண முற்பட்டிருந்தால் என்றோ சிங்கள மக்களும் முன்னேரியிருப்பர்கள் .....
Subscribe to:
Post Comments (Atom)
சரியாகச் சொன்னீர்கள் அரவிந்த்! எனக்கும் இந்த மாதிரி ஒரு எண்ணவோட்டம் இருந்தது. குறிப்பாக தமிழகத்தின் சே-குவேரா என்று அதேமாதிரி தொப்பி அரைதாடியுடன் ஏராளமான டிஜிட்டல் பேனர்கள் என்னை எரிச்சலடையச் செய்தன. மனிதகுலத்தை அடுத்கட்டத்திற்கு கொண்டு செல்லக் கூடிய நடவடிக்கையகளில் ஈடுபட்ட ஐகான்களை கேவலப்படுத்துவது என்பது தற்போதைய தமிழ்மரபு என்று ஆகிவிட்டது. ‘புரட்சி‘ என்ற வார்த்தையை பாரதி முதன்முதலில் உபயோகித்ததிலிருந்து இன்று எவ்வளவு மோசமான பதத்தைக் கொடுக்ககூடிய அளவிற்கு சிதைக்கப்பட்டிருக்கிறது. அந்த வரிசையில் சே-குவாராவையும் குழிதோண்டி புதைக்கும் முயற்சியின் ஆரம்ப கட்டமே தற்போதைய டிஜிட்டல் பேனர்கள். அரசியலுக்கு வந்து அதிகாரத்தை சுவைப்பதற்கு முன்பே கோடிக்கணக்கில் சுயவிளம்பரத்திற்கு பணம் செலவிட இவர்களுக்கு எங்கிருந்து வந்தது பணம்? இதற்கு நேர்மையான பதில் இல்லை. இது மக்களை அரசியல்மல்லாமாக்கல் போக்கிற்கு இழுத்துச் செல்லும் நடவடிக்கையே!
ReplyDeleteLot of spelling mistakes. But good try. Keep going!
ReplyDeleteதங்கள் பதிவிற்கு நன்றி.
ReplyDeleteஇனி வரும் காலங்களில் இது மென்மேலும் தொடராமல் பார்த்துக்கொள்கிறேன்.