Sunday, May 10, 2009

கருவறைக் கூச்சல்

உணவளிக்கும் உயர்விடமே உயிர் பிரிக்க முந்தியது!
உதவியற்றுத் திறிவதனால் குருதிக்குழாய் சிதறியது!
உடன் பிறவாச் சகோதரனே உடல் பிளக்க முற்பட்டான்!
உரு தெரியா இனவெறியின் உயிர்ப்பசிக்கு முடிவில்லையோ?
கருவறையில் கூச்சலிடும் குரலுனக்குப் புரிகிறதா?
கல்லறைக்குப் போவதற்குள் கண்துடைக்க வாராயோ?
- ஈழத்தமிழன்.

No comments:

Post a Comment